spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

-

- Advertisement -

மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே கரும்பு தோட்டத்தில் காட்டுப்பன்றிகாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

we-r-hiring

 

மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள எஸ்.ஏரிப்பாளையம் பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் மின்வேலியில் மின்சாரம் தாக்கி சுமார் 19 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடைப்பதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு நேரில் சென்று வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

 

மின் வேலியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

விசாரணையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர் பாவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி மகன் கலையரசன் (வயது 19) என்பதும், காட்டுப்பன்றிகள் கரும்பு வயலில் வந்து கரும்புகளை வீணாக்குகிறது அதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சட்டவிரோதமாக நிலத்தில் மின்வேலி அமைத்திருந்த எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் கலியமூர்த்தி மகன் ஆறுமுகம் (37), பாவாடை மகன் குப்பன் (45) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/tnstc-press-release/84616

உயிரிழந்த கலையரசன் எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ