Homeசெய்திகள்தமிழ்நாடு"உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

 

"தமிழகத்தில் வெப்ப அலை வீசும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
File Photo

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரூ.70 லட்சத்தில் வைர வாட்ச்… கவனம் ஈர்க்கும் சமந்தா…

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26- ஆம் தேதி வரை வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும். தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதியில் வெப்பநிலை 39 முதல் 41 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும்.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்ஸியஸை ஒட்டியே இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1இல் ட்ரிபிள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்!

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்; வெப்பத்தைத் தணிக்க பழச்சாறு கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

MUST READ