Homeசெய்திகள்தமிழ்நாடுதலைமன்னார்- தனுஷ்கோடிக்கு 11 மணிநேரம் கடலில் நீந்தி பெண் சாதனை

தலைமன்னார்- தனுஷ்கோடிக்கு 11 மணிநேரம் கடலில் நீந்தி பெண் சாதனை

-

தலைமன்னார்- தனுஷ்கோடிக்கு 11 மணிநேரம் கடலில் நீந்தி பெண் சாதனை

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை 11 மணி நேரம் கடலில் நீந்தி 45 வயது பெண் சாதனை படைத்துள்ளார்.

3
டெல்லி லேடிஸ் ஸ்ரீராம் காலேஜ் ஆசிரியராக பணிபுரிபவர் 45 வயதான மீனாட்சி பகுஜா. இவர் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து ஒரு நாட்டுப் படகு மற்றும் ஒரு விசைப்படகில் மதுரை மாவட்ட நீச்சல் சங்க குழுவுடன் இணைந்து மொத்தம் 13 நபர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 4 மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு சுமார் இரவு 9 மணி அளவில் இலங்கை தலைமன்னாரை சென்றடைந்துள்ளனர்.

இலங்கைத் தலைமன்னாரிலிருந்து இரவு பத்து மணி அளவில் மீனாட்சி பகுஜா கடலில் நீந்த துவங்கி உள்ளார். ஏப்ரல் இரண்டாம் தேதி இன்று காலை 9 மணி அளவில் சுமார் 11 மணி நேரம் கடலில் நீந்தி தனுஷ்கோடி வந்தடைந்தார் தனுஷ்கோடி வந்த அவருக்கு மீனவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் சாதனைக்கான கேடயத்தை வழங்கி கௌரவித்தனர்.

Women

 

இந்த நிகழ்வை மதுரை மாவட்ட நீச்சல் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் N.J போஸ் மற்றும் மதுரை மாவட்ட நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் குழுவினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் 45 வயதான மீனாட்சி பகுஜா 11 மணி நேரம் கடலில் நீந்தி சாதனை புரிந்தமைக்கு தங்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

MUST READ