Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணாமலையை முட்ட வந்த காளை! பாதயாத்திரையில் பரபரப்பு

அண்ணாமலையை முட்ட வந்த காளை! பாதயாத்திரையில் பரபரப்பு

-

அண்ணாமலையை முட்ட வந்த காளை! பாதயாத்திரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தனது பாதயாத்திரையை துவக்கினார்.

அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் ’என் மண் என் மக்கள்’ என்ற கோஷத்தோடு பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை அறந்தாங்கி, திருப்பத்தூர் வழியாக இன்று காலை மேலூரை வந்தடைந்தது. காலை 9 மணிக்கு யாத்திரை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 10:30 மணி வரை துவங்காததால் தொண்டர்கள் கலக்கமடைந்தனர். தொண்டர்களை உற்சாகப்படுத்த கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அண்ணாமலை

10: 45 மணிக்கு வந்த அண்ணாமலை அரசு கலை கல்லூரியில் இருந்து தனது பாதயாத்திரையை துவக்கினார். அப்போது அவருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக கொட்டாம்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் நான்கு ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்துவரப்பட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது ஒரு காலை திமிறி கொண்டு துள்ளியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சுதாரித்துக் கொண்ட அண்ணாமலை ஜல்லிக்கட்டு காளைக்கு மரியாதை செய்து தொடர்ந்து தனது யாத்திரையை நடத்தி வருகிறார்.

MUST READ