Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நவ.4-ல் முதலமைச்சர்  திறந்துவைக்கிறார்

கோவை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நவ.4-ல் முதலமைச்சர்  திறந்துவைக்கிறார்

-

- Advertisement -

கோவையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை வரும் நவம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

"டி.ஆர்.பி.ராஜா அதிக முதலீடுகளை ஈர்ப்பார்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

we-r-hiring

கோவை மாநகரம் விளாங்குறிச்சியில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. எல்காட் டெக் பார்க் திட்டம் கட்டுமானப் பணிகள் பல்வேறு காரணங்களால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. கட்டுமான பணிகள் முழுமை பெற்றுள்ளதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் நவம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

இந்த தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்படுவதன் மூலம் சுமார் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. மேலும், கோவையில் அமையவுள்ள கலைஞர் நூலகத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

MUST READ