Homeசெய்திகள்ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

-

- Advertisement -
kadalkanni

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு நகரும் பாதையில் மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில் தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 1050 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும்,  நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 980 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்றும், நாளையும், நாளை மறுநாளும் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ