spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்

வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்

-

- Advertisement -

வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி… பள்ளியில் ‘டென்ஷன்’... வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த ஆசிரியை!

புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கத்தில் உள்ள புனித தோமையார் துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிப்புரிந்து வந்தவர் அன்னாள் ஜெயமேரி (53). தற்போது பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நடைபெற்றுவரும் நிலையில், மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு எமிஸ் எனும் கல்வித்துறை செயலி மூலம் காலாண்டு தேர்வு நடத்திவிவரங்களை பதிவு செய்தார். ஆனால் ஆசிரியை பதிவு செய்த விவரங்கள் செயலியில் பதிவாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயமேரி, இதுகுறித்து மற்றொரு ஆசிரியையிடம் பதற்றத்துடன் கூறியதாக தெரிகிறது.

we-r-hiring

பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கிவிழுந்த ஆசிரியை ஜெயமேரியை மீட்ட சக ஆசிரியர்கள், உடனே புள்ளம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயமேரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

MUST READ