Homeசெய்திகள்தமிழ்நாடுரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

-

- Advertisement -

தொலைதூர பயணங்களுக்கான புதிய ரயில் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வருகிறது.

we-r-hiring

சாதாரண வகுப்புகளில் 215 கி.மீ-க்கு மேல் பயணிப்போருக்கு ரயில் கட்டணம் உயர்வு இன்று அமலுக்கு வருகிறது. 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டருக்கும் ஒரு பைசா, மெயில், ஏசி அல்லாத எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரயிலில் ஏசி வகுப்பில் பயணிக்க ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டருக்கும் 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. 215 கி.மீ. வரை பயணிப்பவர்களுக்கு ரயில் கட்டண உயர்வு இல்லை என ரயில்வே விளக்கமளித்துள்ளது.

புதிய கட்டண உயர்வு காரணமாக ரயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும். அதேவேளையில், நகர்ப்புறம், சீசன் ரயில் டிக்கெட்டுகளின்  கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன. முன்னதாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

MUST READ