spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை!

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை!

-

- Advertisement -

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

we-r-hiring

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. 96 கோடி வாக்காளர்களில் 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர். மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார். சுமார் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலையில் உள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரையில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி 1 இடத்திலும், பாஜக கூட்டணி 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

 

MUST READ