spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

நான் சொன்ன தம்பி ஞானசேகரன் இவர்தான் – சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

-

- Advertisement -

தம்பி ஞானசேகரன் என பேசிய பேச்சு பொதுவான நிகழ்ச்சியில் தனக்கு சால்வை அணிவித்த வேறொரு நபர் குறித்து நகைச்சுவையாக பேசியது என்றும், அதனை வெட்டி ஒட்டி காணொளியாக உருவாக்கி சமூக வலைதளத்தில் பரப்பி விட்டனர் என்றும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணாமலை தேவையற்ற அரசியல் செய்கிறார் - சபாநாயகர் அப்பாவு

we-r-hiring

பள்ளிக் கல்வித்துறை சார்பில் குடியரசு தின மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நெல்லை பாளையங்கோட்டை சீவலப்பேரி சலையில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு மாநில அளவிலான நீச்சல் போட்டிகளை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேசியதாவது:- மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் கூட்டமைப்பு சார்பில் பீகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் நடந்து கொண்டது தொடர்பாகவும் அவ்வாறு மாநிலங்களில் ஆளுநர்கள் செயல்படக் கூடாது எனவும் வலியுறுத்தி பேசினேன். இது குறித்து பேச அனுமதி மறுத்ததுடன். உங்களது பேச்சு பதிவாகாது என ராஜிய சபா துணைத் தலைவர் தெரிவித்தார். ஆகையால் ஜனநாயக முறைப்படி எனது எதிர்ப்பை காட்டும் வகையில் வெளிநடப்பு செய்திருந்தேன்.

தம்பி ஞானசேகரன் என ஒரு நிகழ்ச்சியில் சாதாரணமாக பேசியதை பெரிதுபடுத்தி வருகிறார்கள். நான் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஞானசேகரன் என்ற நபர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரை கேட்டு நகைச்சுவையாக அவரை மையப்படுத்தி பேசியதை சர்ச்சையாகி விட்டனர். வெட்டி ஒட்டி அந்த காணொளியை வெளிப்படுத்தி உள்ளனர். முழு காணொளியை பார்த்தால் அந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரியும்.

பரந்தூர் விமான நிலையம் அந்த பகுதியைவிட்டு வேறு எங்கும் செல்லாது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். விஜயை கண்டு தமிழக அரசுக்கு எந்த பயமும் இல்லை. சமூக விரோதிகளால் சட்டம், ஒழுங்கு சீர்குலைக்கும் நோக்கத்தோடு சிலர் செயல்பட நினைக்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டங்கள் நடத்த வேண்டும் என அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் சொல்லும் நபர் திருமண மண்டபத்தில் தான் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் செயல்படுகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ