spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஏப்.28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

ஏப்.28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

-

- Advertisement -

 

we-r-hiring

இன்று (ஏப்ரல் 25) முதல் ஏப்ரல் 28- ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று (ஏப்ரல் 25) முதல் ஏப்ரல் 29- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது. அதிக வெப்பம், ஈரப்பதம் இருக்கும் போது ஒரு சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். இன்று (ஏப்ரல் 25) முதல் ஏப்ரல் 28- ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 29- ஆம் தேதி முதல் மே 01- ஆம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ