Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து

திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து

-

திருப்பூர் அருகே குளத்தில் காா் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: குளத்தில் காா் விழுந்து விபத்து

திருப்பூா் மாவட்டம், சாமளாபுரத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த செல்வம் காய்கறக் கடை நடத்தி வருகிறது. இவரிடம் சின்ராசு என்பவா் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் காய்கறிகள் வாங்குவதற்காக சின்ராசு, செல்வத்தின் காரை எடுத்துச் சென்றுள்ளாா்.

திடீரென சாமளாபுரம் குளக்கரை வழியாக செல்லும்போது காா் தாறுமாறாக ஓடி குளத்தில் விழுந்தது. இதில், காரின் கதவைத் திறந்துகொண்டு சின்ராசு வெளியே வந்தாா்.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மங்கலம் காவல் துறை, பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணப்புத் துறையினா் கிரேன் மூலம் குளத்தில் மூழ்கிய காரை மீட்டனா்.

இந்த விபத்து குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

MUST READ