Homeசெய்திகள்தமிழ்நாடு"எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்"- சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்”- சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

-

 

"எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம்"- சபாநாயகர் அப்பாவு விளக்கம்!
Photo: TN Govt

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தைக் கண்டித்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் ஆர்.பி.உதயக்குமாருக்கு வழங்கக்கோரியும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.க. உறுப்பினர்களை அவைக் காவலர்களால் வெளியேற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டவாறு, அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் அழைத்த இஸ்ரேல் பிரதமர்!

இதனிடையே, பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. இருக்கை விவகாரத்தில் நான் வீம்புக்காக செய்யவில்லை; சட்டப்படி நடக்கிறேன்; இது என் உரிமை. யாருக்கும் சிறு மனக்குறை வரக்கூடாது என்று தான், இந்த வகையை நடத்தி வருகிறோம். இடையூறு செய்ததாலேயே வெளியேற்ற உத்தரவிட்டேன்; இனி இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!

அதைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “உட்கட்சிப் பிரச்சனையை சட்டப்பேரவையில் பேசியது வருந்தத்தக்கது; அ.தி.மு.க. வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு தான்” என்றார்.

MUST READ