spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

தமிழக அரசின் 2023- ஆம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

we-r-hiring

திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் தம்புராஜுக்கு நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாணவர்களிடம் பாலியல் குற்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த சென்னை மருத்துவக் கல்லூரி டீன் தேரணி ராஜன், இரத்த சோகைநோயைக் குணப்படுத்தும் திட்டத்துக்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோருக்கும் நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை

விருதுக்கு தேர்வானோருக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல் ஆளுமை விருதுகளை வழங்கவுள்ளார்”. இவ்வாறு அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ