spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

“முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

-

- Advertisement -

 

"முதலீட்டாளர் மாநாடு முக்கிய மைல்கல்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

we-r-hiring

இந்தியாவே வியக்க வெற்றிகரமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்!

‘தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024’ குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024ஐ இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

இருநாள் மாநாடு, 20 ஆயிரம் தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது.

நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம். அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு- 2024. ‘எல்லோருக்கும் எல்லாம்’, ‘எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’ என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த இரண்டு நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூபாய் 6,64,180 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசுத் தெரிவித்துள்ளது.

MUST READ