spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபோக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: சென்னையில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

 

அரசு பேருந்து ஜப்தி

we-r-hiring

சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்!

போக்குவரத்துத் தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் தொ.மு.ச. மற்றும் ஐ.என்.டி.யூ.சி. சங்கங்கள் பங்கேற்கவில்லை. மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகல் என ஐ.என்.டி.யூ.சி. அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கால அட்டவணைப்படி மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று MTC அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜன.09) அதிகாலையில் ஐயப்பன்தாங்களில் இருந்து பல்வேறு தடங்களில் 55 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியில் இருந்து காலை 06.00 மணிக்கு 78 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

MTC பொதுமேலாளர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது, “சென்னையில் இன்று (ஜன.09) காலை நிலவரப்படி சுமார் 2,098 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. சென்னை பணிமனைகளில் இருந்து அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம்; போக்குவரத்து இயக்கம் கண்காணிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம், தாம்பரம், பாரிமுனைக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

MUST READ