Homeசெய்திகள்தமிழ்நாடுஜெம் வீரமணி வழக்கு: தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் மனு விசாரணை நவம்பர் 20-க்கு ஒத்திவைப்பு –...

ஜெம் வீரமணி வழக்கு: தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் மனு விசாரணை நவம்பர் 20-க்கு ஒத்திவைப்பு – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரகாஷுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியது. மேலும், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, முன்ஜாமீன் வழங்கக் கோரி பிரகாஷ் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரகாஷ் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுந்தர மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க பிரகாஷ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரகாஷின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஜெம் வீரமணி வழக்கில் ஓட்டுநர் பாலா சிக்கியது எப்படி? நீச்சல் குளம் அருகே பெண்ணின் உடல் புதைக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் – 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தோண்டும் பணி!

MUST READ