Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? – வழக்குகள், மீட்கப்பட்டவர்கள், நிலுவை விசாரணை குறித்து...

தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? – வழக்குகள், மீட்கப்பட்டவர்கள், நிலுவை விசாரணை குறித்து டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!

-

- Advertisement -

தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகளில் விசாரணை நிலுவையில் உள்ளது? என்பது உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் எத்தனை பேர்? – வழக்குகள், மீட்கப்பட்டவர்கள், நிலுவை விசாரணை குறித்து டிஜிபியிடம் அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், காணாமல் போன தனது கணவரை மீட்டுத் தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் முழுமையான விவரங்களைக் கோரியுள்ளது.

குறிப்பாக, தமிழகம் முழுவதும் இதுவரை காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், இன்னும் எத்தனை வழக்குகளின் புலன்விசாரணை நிலுவையில் உள்ளது என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த காவல்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தையும் தொகுத்து மூன்று வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளின் தற்போதைய நிலை மற்றும் அவர்களைக் கண்டறிய காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை – அண்ணாமலை கடும் விமர்சனம்!

MUST READ