Homeசெய்திகள்தமிழ்நாடுடெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – மாணிக்கம் தாகூர்...

டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – மாணிக்கம் தாகூர் உடனிருந்தார்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் நடவடிக்கையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – மாணிக்கம் தாகூர் உடனிருந்தார்!

ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சந்தித்திருந்த அவர், தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரைச் சந்தித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூரும் உடனிருந்தார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவரையும் அமைச்சர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

டெல்லியில் இடதுசாரித் தலைவர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் சந்திப்பு! – எம்.ஏ.பேபி, டி.ராஜாவுடன் முக்கிய அரசியல் ஆலோசனை!

MUST READ