Homeசெய்திகள்தமிழ்நாடுகிடு கிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை

கிடு கிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை

-

கிடு கிடுவென உயர்ந்து ஷாக் கொடுத்த தங்கம் விலை

நகைகளுக்கு ஹால்மார்க் உடன் 6 இலக்க HUID எண் கட்டாயம் என்பதால் தங்கம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 520 உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ. 5,600-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் அதிகரித்து ரூ.77.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,800-ஆக இருக்கிறது.

MUST READ