spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று வெளியாகிறது தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்!

இன்று வெளியாகிறது தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்!

-

- Advertisement -

 

மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. இன்று (மார்ச் 20) காலை 10.00 மணிக்கு வெளியிடுகிறது.

we-r-hiring

பிரதமர் தனது தகுதிக்கு ஏற்றவாறு பேச வேண்டும் – டி.ஆர். பாலு பதிலடி!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 20) தொடங்கவுள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் தவிர மற்ற கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மக்களவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

இந்த சூழலில், 21 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரங்களை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) காலை 10.00 மணிக்கு வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவுள்ளார்.

MUST READ