spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

மக்களவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

-

- Advertisement -

மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.

we-r-hiring

இந்த நிலையில், மக்களவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே வேட்புமனு பெறப்படும். அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ