Homeசெய்திகள்தமிழ்நாடுகாலத்தால் அழியாத காதல் கவிஞன் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று!!

காலத்தால் அழியாத காதல் கவிஞன் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று!!

-

பல பாடல் சிற்பங்களை செதுக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களுக்கு  பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

கண்ணதாசன்,வைரமுத்து,வாலி அவர்களைப் போன்று தனது தனித்த பாடல் வரிகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் .காதல் நட்பு,சோகம் போன்ற உணர்வுகளுக்கு உயிரூட்டியவர் நா.முத்துக்குமார்.இளைஞசர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர்.

காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குநர் ஆகும் ஆசையில் சென்னை வந்தார். கணையாழி இதழில் அவர் எழுதி அனுப்பிய தூண் என்ற கவிதைதான் சினிமாவில் அவரை நுழைய வைத்தது.  கணையாழி இதழ் ஆண்டு மலரில் வெளியானது.

இயக்குநர் பாலுமகேந்திராவிடம் 4 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர்.கவிதை எழுதுவதிலும்,பாடல் வரிகள் எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது முதல் பாடலை சீமான் இயக்கிய வீரநடை படத்தில் தனது முதல் பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானார்.இந்த படம் தொடங்கி தரமணி படம் வரையில் சுமார்1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.குறிப்பாக 2012 ஆம் ஆண்டில் மட்டும் 103  பாடல்களை எழுதி சாதனைப்படுத்தியுள்ளார்.

தேசிய விருதுகள்,ஃப்லிபைன் விருதுகள்,தமிழக விருதுகள் போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ள இவர் கிரீடம் படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியிருக்கிறார்.ஏ.ஆர் ரஹ்மான் ,இசைஞானி இளையராஜா,ஜீவி பிரகாஷ்,ஹாரீஸ் ஜெயராஜ்  போன்ற இசை ஜாம்பாவான்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.

இவர் யுவன் சங்கர்ராஜா முத்துக்குமாரின் கூட்டணி தனிதுவமானதாக திகழ்ந்தது.இருவரின் கூட்டணியில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.குறிப்பாக தங்கமீன்கள் என்ற படத்தில் ஆனந்த யாழினை மீட்டுகிறாள் பாடலானது ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது,மேலும் சைவம் படத்தில் இடப் பெற்ற அழகே அழகே எல்லாம் அழகே பாடல் மூலமும் அடுத்தடுது 2 தேசிய விருதுகளை தனதாக்கிக் கொண்டார்.

திரைப்பாடல்களை தவிர்த்து பட்டாம்பூச்சி விற்பவன்,அ’னா ஆவண்ணா,நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற கவிதை தொகுப்புகளையும், கிராமம் நகரம் போன்ற கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டு உள்ளார்.மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார் 2016 ஆம் ஆண்டு தனது 41 வது வயதில் காலமானார்.அவர் இப்போது இல்லாது போனாலும் அவரது பாடல்களின் மூலம் நம்முடனே இருக்கிறார் என்றே சொல்லலாம்.

நா.முத்துகுமாரின்,” பாடல் வரிகள் ஒலிபரப்பப்படும் ஒவ்வோரு வரியிலும் முத்து இருப்பான்”, என்று கூறுகிறார் இயக்குநர் ராம்.இவரின் பாடல்களின் வரிகள் மயிலிறகாக மனதை வருடுகிறது இன்றளவும்.மெல்லிசைக்கு ஆழமான கவிதைகளையும்,துள்ளல் இசைக்கும் பாடல் வரிகளை எழுதும் ஆற்றல் படைத்தவர்.இவரின் உடல் மறைந்தாலும் இவருடைய பாடல் வரிகள் நம் மனதை விட்டு என்றும் மறையாது.

 

MUST READ