spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஇன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!

இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!

-

- Advertisement -

இன்று வேளாங்கண்ணி தேர்பவனி. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்…

இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க உலகம் முழுவதும் இருந்து வருடத்தின் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை தருவர். இதன் காரணமாக வேளாங்கண்ணியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா வெகுவிமர்சனமாக கொண்டாடப்படுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா ஆகஸ்ட் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடிங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன .இந்நிலையில் வேளாங்கன்னி பேராலய விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று செப்டம்பர் 7ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.

we-r-hiring

இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!

 

 

தேர்பவனியில் கலந்து கொள்வதற்க்காக தமிழகத்தின் பிற பகுதிகளில் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி வந்த வண்ணம் உள்ளனர். எங்கு  பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை நாளை ஆரோக்கியமாதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பள்ளி ,கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

MUST READ