- Advertisement -


தமிழகத்தில் உள்ள 25- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
“தெற்கிலிருந்து வரும் குரலுக்காகக் காத்திருங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
அதன்படி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. ஒரு முறை கட்டணம் 5 ரூபாய் முதல் 45 ரூபாய் வரையிலும், இருமுறை கட்டணம் 10 ரூபாய் முதல் 65 ரூபாய் வரையிலும் உயருகிறது.
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!
அதேபோல், வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் உயரவுள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


