
தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்தம் நள்ளிரவில் தொடங்கியது. நேற்றைய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்
போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழகம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டில் 20 பேருந்துகளில் 8 பேருந்துகள், மதுராந்தகத்தில் 22 பேருந்துகளில் 8 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், புதுக்கோட்டை மாநகரில் காலை 06.00 மணி வரை 30 பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில், 25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்!
மதுரையில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருச்சி, நெல்லைக்கு பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. திருவாரூரில் 18 பேருந்துகளில் 9 பேருந்துகளும், திருத்துறைப்பூண்டியில் 40 பேருந்துகளில் 32 அரசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சேலம் கோட்டத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் இன்று வழக்கம் போல் இயக்கப்படுகின்றன.