
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை”- உச்சநீதிமன்றம்!
தமிழ்நாடு அரசுப் பேருந்துப் போக்குவரத்துக் கழகத்தின் தொழிற்சங்கத்தினர் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி வரும் ஜனவரி 09- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் போக்குவரத்துத் துறைச் செயலாளர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை அதிகாலை 03.00 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை!
இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வேலை நிறுத்தத்தை அறிவித்தாலும் அரசுடன் பேசத் தயார் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.