

வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெற முடியாது என்று தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் நாளை (ஜன.09) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, நேற்று (ஜன.07) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்த நிலையில், இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (ஜன.08) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், திட்டமிட்டபடி, வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.
வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் தங்கநகைகள் கொள்ளை!
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சி.ஐ.டி.யு. சவுந்தரராஜன், “கோரிக்கைகளை ஏற்க அரசு தரப்பு மறுப்பு தெரிவித்தது; கோரிக்கைகள் மீது இப்போதைக்கு முடிவெடுக்க முடியாது என அரசு கூறியுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை பொங்கலுக்கு பின் பேசிக் கொள்ளலாம் என அரசு கூறியது. போக்குவரத்து ஊழியர்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசுப் பார்க்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு வஞ்சிக்கிறது. போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் பாகுபாடு பார்க்காதீர்கள்; எங்களை ஒதுக்காதீர்கள். நாளை (ஜன.08) திட்டமிட்டப்படி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்” என்று அறிவித்துள்ளார்.


