Homeசெய்திகள்தமிழ்நாடு‘தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்த்தவர் சௌகார் ஜானகி’ - அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...

‘தான் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு பெருமை சேர்த்தவர் சௌகார் ஜானகி’ – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகழஞ்சலி!

-

- Advertisement -

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவிற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

we-r-hiring

டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

“தமிழ்த் திரையுலகின் தனித்துவமிக்க பழம்பெரும் நடிகையும், திரைப்படத் துறையில் மட்டுமின்றி நாடகத் துறையிலும் கோலோச்சி, தனது முத்திரையைப் பதித்தவருமான பத்மஸ்ரீ சௌகார் ஜானகி இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் பெருமை சேர்த்த சௌகார் ஜானகியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் சக திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”

திரையுலகிலும் நாடகத் துறையிலும் முத்திரை பதித்த சௌகார் ஜானகியின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரையுலகப் பிரபலங்களும் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமாவில் பேசுற பஞ்ச் டயலாக் வேண்டாம்: கோப்புகள் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் – உதயநிதி ஸ்டாலின் சவால்!

MUST READ