Homeசெய்திகள்தமிழ்நாடுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத தவெக அரசின் முதல் பட்ஜெட் - மு.வீரபாண்டியன் விமர்சனம்!

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத தவெக அரசின் முதல் பட்ஜெட் – மு.வீரபாண்டியன் விமர்சனம்!

-

- Advertisement -

​தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி, மகளிர் நலம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் துறை சார்ந்த சில அறிவிப்புகள் இதில் இடம்பெற்றுள்ள போதிலும், பெரும்பான்மையான மக்களின் எதிர்பார்ப்புகளை இப்பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத தவெக அரசின் முதல் பட்ஜெட் - மு.வீரபாண்டியன் விமர்சனம்!

we-r-hiring

 

 

வாக்குறுதிகளும் ஏமாற்றங்களும்
​வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம், செயற்கை நுண்ணறிவு (AI) பயிற்சி போன்ற சில முன்னெடுப்புகள் அறிவிக்கப்பட்டாலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட வேலை இல்லா பட்டதாரிகளுக்கான மாதந்தோறும் ரூ.4,000 நிவாரண உதவி குறித்த எந்த அறிவிப்பும் இடம்பெறாதது இளைஞர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பணியாளர் நலம் – ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களின் நீண்டகாலப் பணிநிரந்தரம் குறித்த அறிவிப்பு இல்லாதது பெரும் பகுதி தொழிலாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

​மகளிர் நலத் திட்டங்கள் குடும்பத் தலைவிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும் என்றும், ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறாதது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம் குறித்த வாக்குறுதியும் விடுபட்டுள்ளது.

விவசாயிகள் ஏமாற்றம் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருப்பது விவசாயிகளை ஆத்திரமூட்டியுள்ளது.

​வரவேற்புக்குரிய சில அறிவிப்புகள்
​கல்வி மற்றும் சுகாதாரம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை நடைமுறையில் இருந்த காலை உணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும், மூத்த குடிமக்களுக்காக 1,000 நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது.

​தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ (1 கிராம் தங்கம், 8 கிராம் வெள்ளி மற்றும் பட்டுப்புடவை) வழங்கும் திட்டம், உயர் கல்விக்கான போட்டித் தேர்வுப் பயிற்சி மையங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் AI பிரிவு தொடங்குவது போன்ற வாக்குறுதிகள் பட்ஜெட்டில் கவனிக்கப்பட்டுள்ளன.

​மின்சாரம் மற்றும் சுற்றுச்சூழல்- இரு மாதங்களில் 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும், நீண்டகாலச் சவாலான கூவம் மற்றும் அடையாறு நதிகளை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் திட்டமும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

கல்வித்துறை நிதி குறைப்பும் இதர விவகாரங்களும்
​கடந்த 2025-26 பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய பட்ஜெட்டில் அது ரூ.44,527 கோடியாகக் குறைக்கப்பபட்டுள்ளது. அதேபோல், உயர்கல்வித்துறைக்கான நிதியும் ரூ.8,494 கோடியில் இருந்து ரூ.8,393 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளமை வருந்தத்தக்கது.

​அரசு ஒப்பந்தப் பணிகளில் ஊழலைத் தடுத்து வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நெகிழ்வுத்தன்மை வரவேற்கத்தக்கது என்றாலும், குறைந்த ஏலக் கோரிக்கையால் பணிகளின் தரமும் உறுதியும் குறையாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

​ஒன்றிய அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாநில அரசு ரூ.5,057 கோடி பங்களிக்க வேண்டியுள்ள நிலையில், மாநிலக் கூடுதல் 25 நாட்களுக்கு வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது போதாது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

​ஒட்டுமொத்தத்தில், தவெக அரசின் இந்த முதல் நிதிநிலை அறிக்கை சில குறிப்பிட்ட பிரிவுகளின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தாலும், பெரும்பான்மையான மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை என மு.வீரபாண்டியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் தவெக அரசின் பட்ஜெட் – பத்திரிகையாளர் கோடீஸ்வரன் விமர்சனம்!

MUST READ