spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!

முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!

-

- Advertisement -

 

முதலமைச்சரை நேரில் சந்தித்து நிவாரண நிதியை வழங்கிய டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர்!
Photo: TN Govt

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள், நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசுக்கு உதவும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், திரையுலகினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர்.

we-r-hiring

வீட்டின் முன்பு குவிந்திருந்த ரசிகர்கள் : வாழ்த்து கூறிய ரஜினி..

அதன் தொடர்ச்சியாக, இன்று (டிச.08) காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த டி.வி.எஸ். குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!

இந்த நிகழ்வின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., டி.வி.எஸ். குழும இயக்குனர் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

MUST READ