Homeசெய்திகள்தமிழ்நாடுவட மற்றும் தென் சென்னை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

வட மற்றும் தென் சென்னை தொகுதி திமுக நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வட மற்றும் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கழக மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், வட சென்னை மற்றும் தென் சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட அமைச்சர் – மாவட்டக் கழகச் செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – மாவட்ட – ஒன்றிய – பகுதி – நகர – பேரூர் கழக நிர்வாகிகள் – துணை மேயர் – மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினோம். தொகுதியில் உள்ள கள நிலவரம் – நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது – தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் – பாக முகவர்களின் பணிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாகக் கேட்டறிந்தோம்.

இந்தியாவை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், நிரூபிக்கிற வகையில் வட சென்னை – தென் சென்னை தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் #INDIA கூட்டணி வெற்றி பெற்றிட வேண்டும் என்ற லட்சியத்தோடு அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

MUST READ