spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!

-

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

we-r-hiring

நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில் தமிழகத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் கூட்டணி மற்றும் கழக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், மாநில உரிமைகளை மீட்பதற்கான களமாக அமைந்துள்ள மக்களவைத் தேர்தலில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.கழக வேட்பாளராக போட்டியிடுகிற சகோதரர் மலையரசனுக்கு ஆதரவாக ஆத்தூர் நகரில் இன்று வாக்கு சேகரித்தோம். என்னதான் கேரண்டி வாரண்டி என்று தமிழ்நாட்டை ஆயிரம் முறை வலம் வந்தாலும், பாசிஸ்ட்டுக்களின் நாடகம் சுயமரியாதைமிக்க தமிழ் நாட்டு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டோம்.

MUST READ