spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - பாஜக கடிதம்"

“உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கடிதம்”

-

- Advertisement -

“உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக கடிதம்”

சனாதனம் தொடர்பான கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைமை எதிர்ப்பு கடிதம் அனுப்பியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய அரசு அறிவித்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். கொசு, டெங்கு, மலேரியா போன்றவற்றை எதிர்க்கக்கூடாது. ஒழிக்க வேண்டும், அதேபோல்தான் சனாதனமும். கம்யூனிச இயக்கமும், திராவிட இயக்கமுதான் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்தது. சாதியாக மக்களை பிரித்தது சனாதானம்” என பேசியிருந்தார்.

we-r-hiring

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சனாதனம் தொடர்பான கருத்துக்களை உதயநிதி ஸ்டாலின் திரும்ப பெற்று மன்னிப்பு கூற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி பாஜக தலைமை எதிர்ப்பு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உதயநிதி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும். உதயநிதி தன் கருத்தை திரும்ப பெறாவிட்டால், இதற்கு பின்னால் முதலமைச்சராகிய நீங்களும் உள்ளீர்கள் என்று அர்த்தம் என கடிதத்தில் பாஜக வலியுறுத்தியுள்ளது.

MUST READ