Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டாலின் கட்டளையிட்டால் உற்சாகத்துடன் செய்து முடிக்க தயார்- உதயநிதி ஸ்டாலின்

ஸ்டாலின் கட்டளையிட்டால் உற்சாகத்துடன் செய்து முடிக்க தயார்- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

திராவிட மாடல் பயிற்சிப் பாசறை -2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா, சென்னை அண்ணா அறிவாலயற்றில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

udhayanidhi stalin
udhayanidhi stalin

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் ஆ.ராசா, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர் அணியை சார்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

we-r-hiring

மேடையில் உரையாற்றிய திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இளைஞரணி செயலாளராக தாம் பொறுப்பேற்று மூன்றரை வருடம் ஆகியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முதல் திமுக இளைஞர் அணி நிகழ்ச்சி இது. தன்னைவிட இளைஞர்களின் செயல்பாடுகள் குறித்து அதிக அக்கறை செலுத்துபவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்த கட்டமாக ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பாசறை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமையும்.

திமுக இளைஞரணிக்கு 22 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்த்துள்ளனர். இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை இளைஞர் அணியினர் பொதுமக்களிடம் எடுத்து சென்றனர். இளைஞரணி ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. திமுக தலைவர் கட்டளையிட்டால், அவற்றை உற்சாகத்துடன் செய்து முடிக்க, இளைஞரணி தயாராக இருக்கிறது” என உறுதி அளித்தார்.

MUST READ