முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிப் பிரிவு செயலாளர்கள் மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின தலைமைச்செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, நா.முருகானந்தம் ஐஏஎஸ் புதிய தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக இருந்தார். இதனை அடுத்து, முதலமைச்சரின் தனிச் செயலாளர்களும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி, முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். உமாநாத் கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் முதலமைச்சரின் இரண்டாவது செ யலாளராக எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ்-ம், மூன்றாவது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ்-ம்
நியமிக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக மூவரும் முறையே முதலமைச்சரின் 2, 3, மற்றும் 4வது தனிச் செயலாளர்களாக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.