Homeசெய்திகள்தமிழ்நாடுதொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

-

 

தொழில், கலை, அரசியல் துறையினரைச் சந்தித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!
Photo: Union Home Minister Amit Shah

இரண்டு நாள் பயணமாக, தனி விமானம் மூலம் சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே காரில் இருந்து இறங்கிய அமித்ஷா சிறிது தூரம் நடந்துச் சென்று கட்சியின் தொண்டர்களைச் சந்தித்தார்.

வெற்றிமாறனுக்கு முன் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணையும் சூர்யா!

பின்னர், சென்னையில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். அங்கு, பத்மஸ்ரீ விருதுப் பெற்ற அனிதா பால்ராஜ், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, இந்திய சிமெண்ட்ஸ் குழுமத்தின் தலைவர் சீனிவாசன், அப்பல்லோ குழுமத்தின் பிரீத்தா ரெட்டி, விஜயகுமார் ரெட்டி, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான பாரிவேந்தர், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், ஆற்காடு நவாப்கள், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்படத் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்டோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினர்.

தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் மாவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்!

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் உடன் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர், அதே ஹோட்டலிலே நேற்று (ஜூன் 10) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ