spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!

கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!

-

- Advertisement -

 

கோவை வேளாண் பல்கலை., மீன்வளப் பல்கலையில் சேர ஒரே விண்ணப்பம்!
File Photo

நடப்பு கல்வியாண்டில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

‘மாமன்னன்’ படத்தில் லால்… மாரி செல்வராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி!

http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரிக்கு சென்று இன்று (மே 11) முதல் ஜூன் 9- ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு ரூபாய் 250 விண்ணப்பக் கட்டணம் ஆகவும், மற்ற பிரிவினருக்கு ரூபாய் 500 விண்ணப்பக் கட்டணம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 18 உறுப்புக் கல்லூரிகளும், 28 இணைப்புக் கல்லூரிகளும் உள்ளன. அதேபோல், வேளாண் பல்கலைக்கழகத்தில் 14 பட்டப்படிப்புகளுக்கும், 3 பட்டயப் படிப்புகளுக்கும், மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 6 பட்டப்படிப்புகளுக்கும், 3 தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

“மணிகண்டன் கொண்டாடப்பட வேண்டியவர்”… மனதாரப் பாராட்டிய பாடகி சின்மயி!

மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ