spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..

வைகுண்ட ஏகாதசி : திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்..

-

- Advertisement -
திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி தேவஸ்தானம்
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச சுவாமி தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன.

மார்கழி மாதத்தின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி வருகிற 23-ம் தேதி ( சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறந்திருக்கும். இந்த 10 நாட்களிலும் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.. இதனைக்கான ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவர். இதற்காக ஏற்கெனவே ரூ. 300 சிறப்பு தரிசனம் மற்றும் வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன. இந்த டிக்கெட் விநியோகம் முடிவடைந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை ( 22-ம் தேதி) முதல் இலவச தரிசன டோக்கன்கள் தீரும் வரை கூடுதல் மையங்கள் அமைத்து டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

திருப்பதி லட்டு கவுண்டர்

we-r-hiring

அதன்படி, திருப்பதியில், விஷ்ணு நிவாசம் (ரயில் நிலையம் எதிரே), மாதவம் ( பஸ் நிலையம் எதிரே), கோவிந்தராஜ சத்திரம் (ரயில் நிலையத்தின் பின்புறம்), பூதேவி காம்ப்ளக்ஸ் (அலிபிரி கருடன் நிலை அருகே), ராமசந்திரா புஷ்கரணி (மஹதி அரங்கம் அருகே), இந்திரா மைதானம் (மார்க்கெட் அருகே), ஜீவகோனா உயர் நிலைப்பள்ளி, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி, ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி, எம்.ஆர் பள்ளி ஆகிய 9 இடங்களில் சுமார் 90 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களின் வாயிலாக சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ