Homeசெய்திகள்தமிழ்நாடுவேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

-

- Advertisement -

புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத் திருவிழாவையொட்டி அதிகரிக்கும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, தாம்பரம் மற்றும் வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வேளாங்கண்ணி திருவிழா சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் இயக்கம் மற்றும் நேர அட்டவணை
தாம்பரம் – வேளாங்கண்ணி (ரயில் எண்: 06037)
ஆகஸ்ட் 24, 31 மற்றும் செப்டம்பர் 7 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 11:50 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு வேளாங்கண்ணியைச் சென்றடையும்.

we-r-hiring

வேளாங்கண்ணி – தாம்பரம் (ரயில் எண்: 06038):
ஆகஸ்ட் 26, செப்டம்பர் 2 மற்றும் 9 ஆகிய புதன்கிழமைகளில் அதிகாலை 12:45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் காலை 7:30 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும்.

நின்று செல்லும் முக்கிய நிலையங்கள்
இந்தச் சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இருமார்க்கமாகவும் நின்று செல்லும்.

பெட்டிகளின் விவரம்
மொத்தம் 21 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில்:
8 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class)
11 இரண்டாம் வகுப்புப் பொதுப் பெட்டிகள் (Second Class)
2 சரக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பெட்டிகள் (Luggage-cum-Brake Van)

இச்சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை: தவெக அரசின் நிலைப்பாடு குறித்து டிடிவி தினகரன் கண்டனம்!

MUST READ