Homeசெய்திகள்தமிழ்நாடுவீடியோவில் தோன்றிய பெண் உண்மையில் துவாரகா தானா என பலரும் கேள்வி!

வீடியோவில் தோன்றிய பெண் உண்மையில் துவாரகா தானா என பலரும் கேள்வி!

-

- Advertisement -

 

வீடியோவில் தோன்றிய பெண் உண்மையில் துவாரகா தானா என பலரும் கேள்வி!
Video Crop Image

பிரபாகரனின் மகள் துவாரகா என்ற பெயரில் வெளியாகியுள்ள வீடியோவில் தமிழீழத்திற்காக அரசியல் வழியில் தொடர்ந்து பயணிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரபுவிற்கு மருமகனாகும் ஆதிக் ரவிச்சந்திரன்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகளின் பெயரில் வெளியான வீடியோ தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. தமிழ் அமைப்புகள் சார்பில் அனுசரிக்கப்பட்ட மாவீரர் நாள் கூட்டத்தில் பிரபாகரனின் மகள் துவாரகா எனக் கூறி ஒருவர் உரையாற்றிய வீடியோ வெளியானது.

வீடியோவில் பேசிய அவர், எத்தனையோ துரோகங்கள், வீழ்ச்சிகளுக்கு பின், மக்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். தமிழீழம் அமைவதற்கான ஆயுதப்போராட்டம் முடிந்தாலும், அரசியல் போராட்டம் உயிர்ப்புடன் இருப்பதாகப் பேசியுள்ளார். தமிழீழத்திற்கு போராடி, வறுமையில் உள்ள மக்களுக்கு உதவ வேண்டியது கடமை என துவாரகா அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தால் தமிழர்களுக்கு சம உரிமைகள் கிடைக்க வழிபிறக்கும் எனக் கூறிய எந்த நாடும், இதுவரை தமிழீழ மக்களுக்காக உதவவில்லை என துவாரகா குற்றம் சாட்டியுள்ளார். சிங்கள மக்களுக்கு நாம் என்றுமே எதிரி அல்ல; எதிராக செயல்பட்டதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்களின் பிரச்சனையில் தலையீட்ட சக்தி வாய்ந்த நாடுகள் அரசியல் தீர்வை வழங்கவில்லை; ஐ.நா. போன்ற அமைப்புகளும் நீதியைப் பெற்று தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கங்குவா படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இவர் தானாம்…. வெளியான புதிய தகவல்!

இந்த வீடியோவில், துவாரகா என்ற பெயரில் தோன்றிய பெண், உண்மையில் பிரபாகரனின் மகள் தானா என பலரும் கேள்விகளை முன் வைத்துள்ளனர்.

MUST READ