spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!

கோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!

-

- Advertisement -

தந்தை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய பங்குகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து கோடீஸ்வரர் ஆன நபர்.கோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!சவுரவ் தத்தா என்பவர், தனது தந்தை 1990ல் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய JSW ஸ்டீல் பங்குகளின் தற்போதய மதிப்பு (80 கோடியை எட்டியுள்ளது) பங்குகளை வாங்கிய பிறகு, அந்நபர் ஆவணங்களை எங்கோ ஒரு மூலையில் எறிந்த நிலையில், அவரது மகன் சமீபத்தில் அதை கண்டுபிடித்துள்ளாா். சவுரவ் தத்தா தனது வலைதள பக்கத்தில் இச்சம்பவத்தை பகிர்ந்த நிலையில், “நீண்ட காலத்திற்கு சரியான இடத்தில் முதலீடு செய்தால், விளைவு இப்படிதான் இருக்கும்” என பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

JSW ஸ்டீல் லிமிடெட், இந்தியாவின் முன்னணி எஃகு உற்பத்தியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது. JSW குழுமத்தின் ஒரு உறுப்பான இந்த நிறுவனம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளில் எஃகு தயாரிக்கிறது.

we-r-hiring

தற்போது JSW ஸ்டீல் பங்குகளின் விலை ₹1004.90 ஆக உள்ளது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹2.37 டிரில்லியனாக (லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளில், JSW ஸ்டீலின் பங்குகள் நிலையான முறையில் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

பெரியாருடைய தத்துவத்தை தாங்கி தமிழ்நாட்டுக்காக வாழ்ந்து வரும் முதல்வர் – ஆ.ராசா பெருமிதம்

MUST READ