Homeசெய்திகள்தமிழ்நாடுவயநாடு நிலச்சரிவு - நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவு – நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி!

-

வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய கிராமங்கள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி 12வது நாளாக நடைபெற்று வருகிறது.

விக்ரமை தொடர்ந்து வயநாடு மீட்பு பணிக்கு நிதி வழங்கிய பிரபல நடிகர்கள்!

இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் வேண்டுகோளை ஏற்று அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட பலரும் வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி வழங்கப்பட்டது. இதேபோல் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், பிரபாஸ், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பலரும் நிவாரண நிதி வழங்கினர்.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அவர் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். முன்னதாக தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ், வயநாடு நிவாரண பணிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

MUST READ