
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பதவியேற்று இன்றுடன் (மே 07) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நிலையில், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து அவர் மரியாதைச் செலுத்தினார்.
“கேரளா ஸ்டோரி படம் மதத்திற்கு எதிரானது அல்ல”… நடிகை சித்தி இத்னானி விளக்கம்!
அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால நங்கூரம்!
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வாக்களித்தவர்கள் மட்டுமில்லாமல் வாக்களிக்காதோருக்கும் சேர்த்து ஆட்சி செய்கிறோம். ஓட்டுப் போடாதவர்களும் வருந்தும் அளவிற்கு நல் ஆட்சியை கொடுத்து வருகிறோம். விமர்சனங்களைப் புறம் தள்ளிவிட்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்சி செய்து வருகிறேன்” என்றார்.