Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

- Advertisement -
kadalkanni

 

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3 மீ, தூத்துக்குடி, நெல்லையில் 2.2 மீ உயரம் வரை அலைகள் எழும்ப வாய்ப்பு எனவும் இன்று இரவு 11 மணி வரை கடல் அலை சீற்றம் இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடல் கொந்தளிப்பு, கடல் அலை சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கடலோர பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அலை சீற்றத்தால் மீனவர்கள் படகை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ