Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

-

- Advertisement -

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்.... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் சற்று வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பில் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை....மக்களுக்கு உதவ பா.ஜ.க. தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி. நெல்லை. குமரி ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

MUST READ