Homeசெய்திகள்தமிழ்நாடுசிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

 

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிறுபான்மை நலனுக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் 18 சிறும்பான்மையினர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற நோக்குடன் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினர் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 3 முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும். சிறுபான்மையினர் மாணவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரை கல்வி கடன் தரப்படும். சிறுபான்மையினர் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசால் நிரந்தர அந்தஸ்து வழங்கப்படும்.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

நீண்டநாள் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள், தர்காக்களுக்கான மானியம் ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்படும். மத சிறுபான்மையினருக்கு கால வரம்பு குறிப்பிடப்படாமல் நிரந்தர சான்றிதழ் வழங்கப்படும். சென்னை, வேலூர், நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுபான்மை நல அலுவலர்கள் உருவாக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ