spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் உதயநிதியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

அமைச்சர் உதயநிதியின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

-

- Advertisement -

2021 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்ததும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்க பல மாவட்டங்களில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று உதயநிதி அமைச்சரானார்.

கலைஞர் கருணாநிதி தனது 45 ஆவது வயதில் முதலமைச்சரானார். அவரின் மகன் ஸ்டாலின் அவரது 45 ஆவது வயதில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட சென்னை மேயர் ஆனார். தற்போது கலைஞரின் பேரனும் மு.க.ஸ்டாலினின் மகனும் ஆகிய உதயநிதி தனது 45 ஆவது வயதில் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

we-r-hiring

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்காகவும் தற்போதைய முதலமைச்சருக்காகவும் தேர்தல் பிரச்சாரம் செய்தவர் உதயநிதி ஸ்டாலின்.
அப்போது அவர் அரசியல் வாழ்க்கைக்குள் வந்துவிட்டதாக உதயநிதி ஒரு முறை குறிப்பிட்ருந்தார். ஆனால் அவருடைய முழுநேர அரசியல் வாழ்க்கை என்பது கலைஞரின் மறைவுக்கு பின்னர் தான்.

2019ம் ஆண்டு ஜனவரி மாதம், அனைத்து மாவட்டங்களில் நடந்த மக்கள் கிரம சபை கூட்டங்களில் உதயநிதி பங்கேற்றது தான் அவரின் முதல் அதிகாரப்புர்வமான அரசியல் பயணமாக இருந்தது. அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. அதில் உதயநிதியின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

அதற்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் 2019ம் ஆண்டு ஜுலை மாதம் 4ம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பு ஏற்றப்போது திமுக அதிகாரத்தில் இல்லை, ஆனாலும் இளைஞரணியை கொண்டு மக்கள் பணிகளை செவ்வனவே செய்தார்.
இளைஞர் அணி தொண்டர்கள் மூலம் நூற்றுக்கணக்கான ஏரி, குளங்கள் துர்வாரப்பட்டு மக்களின் பயண்பாட்டிற்கு அர்பணித்தார். பின்னர், தொடர்ந்து நீட் எதிர்ப்பு, இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதனை எதிர்த்து போராட்டம் என மக்கள் பிரச்சனைக்காக இறங்கி போராட்டம் நடத்தினார். மேலும் கோரோனா கால கட்டத்தில் வீதியில் இரங்கி வேலை பார்த்தார்.


2021ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டயிட்டு சட்ட பேரவை உறுப்பினர் ஆனார். திருவல்லிக்கேணி தொகுதியில் கடந்த கல்வி ஆண்டில் மட்டும் 1 கோடி ரூபாய் மாணவர்களுக்கு உதவி தொகையாக அளித்துள்ளார்.
அவர் தொகுதி முழுவதும் இலவச இணைய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
திருவல்லிக்கேணி தொகுதிக்கென பிரத்யேகசெல் போன் செயலியை உருவாக்கி தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வு கண்டு வருகிறார்.

2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டிய ஒரே ஒரு செங்கலை வைத்து மாநிலம் முழுவதும் பிராச்சாரம் செய்தார். அதன் மூலம் உதயநிதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதே போல் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயனம் மேற்கொள்ள உதயநிதி திட்டமிட்டுள்ளார்.

MUST READ