கணவரின் உடலை எப்பாடியாவது கொண்டு வந்து தாருங்கள் என்று குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இராயபுரத்தை சேர்ந்த சிவ சங்கரனின் மனைவி கதறியுள்ளார்.
குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதில் 5 பேர் தமிழர்கள் எனவும் அதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரின் உடல் அடையாளம் காணும் பணி தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் அடையாளம் காணும் பணியில் சென்னை இராயபுரத்தை சேர்ந்த சிவசங்கரனின் உடலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது மனைவி ஹேம குமாரி தனது கணவர் உடலை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் இறப்பு செய்தியை கேட்டு தம்மால் தாங்க முடியவில்லை என கதறி அழும் சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
குவைத் தீ விபத்து – முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பலி (apcnewstamil.com)
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குவைத்தில் டிரைவர் வேலைக்காக சென்ற நிலையில் இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தனது கணவர் இறந்து விட்டார் என செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி ஹேமகுமாரி ஏஜெண்டுகளை தொடர்பு கொண்டால் தொலைபேசியில் சரியாக கூறவில்லை எனவும் தனது கணவரின் உடலை எப்படியாவது கொண்டு வர வேணடும் எனவும் தெரிவித்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.