Homeசெய்திகள்தமிழ்நாடுமகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!

மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!

-

 

தலைமை செயலகம் - தமிழக அரசு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்காக மேல்முறையீடு செய்தவர்களில் 2 லட்சம் பேர் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் சேர 11.85 லட்சம் மகளிர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை வட்டாட்சியர்கள், கோட்டாட்சியர்கள் பரிசீலனை செய்து வந்த நிலையில், மேலும் 2 லட்சம் பேர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

2 லட்சம் பேருக்கு வரும் ஜனவரி 10- ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ரூபாய் 1 கொடுத்தால் 29 பைசா மட்டுமே தருகிறார்கள்”- அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ரூபாய் 1,000 வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

MUST READ